வடக்கு மாகாணசபை அமைச்சர் க.சிவநேசன் தனது கள விஜயத்தின்போது வவுனியா முருகனூர் எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் அமைந்துள்ள “அமுதசுரபி கால்நடை வளப்பாளர் சங்கத்தினரை 29.08.207 செவ்வாய்க்கிழமை சந்தித்து அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது அப்பகுதியில் தனியார் பால்சேகரிப்புகளின் போது ஏற்படுத்தப்படும் தடைகளினால் ஏற்படும் சேதங்களால் பெண் பயனாளிகள் படும் துன்பங்கள் சங்கத்தினர் எடுத்துக் கூறினார்கள். இதன்போது அமைச்சர் கூட்டுறவு அமைப்பினர் தற்காலிக தீர்வை கொடுத்திருந்தபோதும் நிரந்தர தீர்வை நோக்கி பயணிக்கக் கூறினார். இதன்போது அமைச்சரின் வவுனியா பிராந்திய இணைபாளர் யோகராஜாவும் சங்க செயலாளர் அவர்களும் இணைந்திருந்தனர். மாடு வளப்பாளர்கள் சந்தித்த இழப்புகளுக்கு அமைச்சர் இதன்போது தனது வருத்தத்தையும் தெரிவித்தார்.