keppapulaகேப்பாபுலவு மக்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 185 ஆவது நாளை எட்டியுள்ளது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்துக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.

2008ஆம் ஆண்டு இறுதிக்காலப்பகுதியில் போர் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் இதுவரை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. மெனிக்பாம் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் மாதிரிக் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். தமது சொந்த நிலத்துக்கு செல்வதற்கான போராட்டத்தை மக்கள் முன்னெடுத்தபோதும் இதுவரை எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.