Header image alt text

sxdfdsஇலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2017) காலை 7மணியளவில் அமரர் வி.தர்மலிங்கம் நினைவுக்குழுவின் ஏற்பாட்டில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. Read more

sfdஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இல்லத்தில் இந்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கூட்டமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சந்திப்பில் நாட்டின் அரசியல் நிலைமைகள் குறிப்பாக அரசியலமைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. Read more

alice g wellsஇலங்கை கடற்படையுடன் இணைந்து அமெரிக்க கடற்படை செயல்படுவதில் ஆர்வத்துடன் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பதில் உதவி செயலாளர் அலிஸ் ஜீ. வெல்ஸ் இதனை தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெறும் இந்தோ பசிபிக் பிராந்திய சமுத்திர உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதன் முறையாக இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படையினர் இணைந்து கடற்பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read more

asdasஇந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்க இலங்கை வருகை தந்துள்ள, அதன் உப தலைவரான இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்தார்.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதான பொருளாதார வளமான சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். Read more

weewrகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் மாணவர், பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தும் எந்தவொரு பரீட்சைகளிலும் தோற்ற முடியாத படி, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சைகளின் போது, இரசாயனவியல் வினாத்தாளை வெளியிட்டதாக இவர் மீது குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.