sxdfdsஇலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2017) காலை 7மணியளவில் அமரர் வி.தர்மலிங்கம் நினைவுக்குழுவின் ஏற்பாட்டில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. நவாலியூர் திரு. க.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி என்பன இடம்பெற்றதுடன், சிறப்பு அஞ்சலி உரையினை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் மற்றும் வைத்தியக்கலாநிதி அமிர்தலிங்கம் பகீரதன் (ரவி) ஆகியோர் ஆற்றினார்கள். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, தாவடி முன்னைநாள் வலிதெற்கு பிரதேச சபை உபதலைவர் பரமேஸ்வரலிங்கம் ஆகியோரும் அஞ்சலி உரையாற்றினார்கள். நன்றியுரையினை அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றினார்.  இன்றைய அஞ்சலி நிகழ்வின்போது 02.09.1985ல் வி.தர்மலிங்கம் அவர்களுடன் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.ஆலோலசுந்தரம் அவர்களும் நினைவுகூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நினைவுதின நிகழ்வில் வட மாகாணசபையின் விவசாய அமைச்சர் க.சிவநேசன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வட மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், முன்னைநாள் வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் ரி.பிரகாஸ், வலிமேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் முக்கியஸ்தர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருந்தொகையான மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து முற்பகல் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

P1460265 P1460279 P1460282 P1460289 P1460290 P1460299 P1460302 P1460306 P1460332thrmar01thrmar02thrmar03 P1460340 P1460342 P1460346 P1460355 P1460366 P1460368 P1460377 P1460382 P1460384 P1460398 P1460402 P1460408 P1460437 P1460440 P1460458 P1460465 P1460473 P1460567 P1460573 P1460576 P1460579 P1460613 P1460623 P1460600 P1460604 P1460606