alice g wellsஇலங்கை கடற்படையுடன் இணைந்து அமெரிக்க கடற்படை செயல்படுவதில் ஆர்வத்துடன் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பதில் உதவி செயலாளர் அலிஸ் ஜீ. வெல்ஸ் இதனை தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெறும் இந்தோ பசிபிக் பிராந்திய சமுத்திர உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதன் முறையாக இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படையினர் இணைந்து கடற்பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இரு கடற்படைக்கும் இடையேயான உறவினை மேம்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்து பசிபிக் பிராந்தியத்தின் சக்தியாக தொடர்ந்தும் அமெரிக்கா திகழும். எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் இந்த பிராந்தியத்தின் வர்த்தகத்தை 568 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிராந்தியத்திய நாடுகளுக்கு அமெரிக்கா நிறுவனங்கள் குடிநீர் முதல் வாநூர்தி உதிரிப்பாகங்கள் வரை விநியோகித்து வருவதாகவும் அலிஸ் ஜீ. வெல்ஸ் கூறியுள்ளார்.