அம்பாறை திருக்கோவில் கள்ளியம்தீவு பகுதியில் முச்சக்கர வண்டியொன்று தடம்புரண்டு எதிரே வந்த பேரூந்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பேரூந்தின் சாரதி திருக்கோவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்தில் திருக்கோவில் 3 ஆம் பிரிவு வாகீசா வீதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஏ.யோகேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவராவார். Read more