உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாக இருந்த 420பேர் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளனர். பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி விசேட ஒழுங்கு விதிகள் சட்டமூலத்தின்படி சம்பந்தப்பட்ட தேர்தல் தொகுதியில் அரச சேவையிலுள்ளவர்கள் இனிமேல் இத் தேர்தலில் போட்டியிட முடியாதென கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இத்தேர்தல் தொகுதிகளில் அரச சேவையிலிருந்த விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகள் போட்டியிட்டனர். இது போன்ற அதிகாரிகள் 420 பேர் கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.