தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வும், “இலட்சிய இதயங்களோடு” நூல் வெளியீட்டு விழாவும் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ். பொதுநூலக கேட்போர் கூட்டத்தில் நேற்று(03.09.2017) மாலை வண.கலாநிதி சு.ஜெபநேசன்; தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தளும், சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி கனக மனோகரனும் கலந்துகொள்ள “இலட்சிய இதயங்களோடு” நூலினை புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் ஆசியுரைகளை நல்லை ஆதீன முதல்வர் திருஞானசம்பந்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். பெரிய பள்ளிவாசல் மௌலவி சுல்தான் அப்துல்காதர் றோசன் (மதனி) ஆகியோர் வழங்கினார்கள்.