யாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தீர்த்தத் திருவிழாவும் கொடியிறக்க நிகழ்வும் நேற்று (03.09.2017) நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் ஆலய தரிசனத்துக்காக அங்கு சென்றிருந்தபோது ஆலயத் தலைவர் ஆறு திருமுருகன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஆலய நிர்வாக சபையினர் அவரை வரவேற்று உபசரித்தார்கள்.