Header image alt text

llllllllllllவடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

மல்வத்து பீட மகாநாயக்கரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பாக மல்வத்துபீட மஹாநாயக்கருக்கு முதலமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார். Read more

UN human right commssionஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் சுவிஸர்லாந்தின் ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகவுள்ளது. ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்க தலைமையிலான குழு இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையை பிரதித்துப்படுத்தவுள்ளது.

நாளைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சிறப்புரையாற்றவுள்ளார். இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையின் விவகாரங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படவில்லை. எனினும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்விகளை எழுப்புவதற்கு வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more

thilak marapana indian prime ministerஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி திலக் மாரப்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று புதுடில்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அமைச்சர் திலக் மாரப்பன இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்திகளை இந்திய பிரதமருக்கு எடுத்துரைத்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைகும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என இதன்போது அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். Read more

saththurukondan massacre1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தினையே உலுக்கிய சம்பவமான சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம் நேற்று மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனியச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சுற்றுவிளைப்பின்போது சிறுவர்கள் முதியவர்கள் பெண்கள் என 188க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். இந்நிலையில் அனைவரும் சத்துருக்கொண்டான் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக அதில் இருந்து தப்பிவந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அது படுகொலையாக கருதப்பட்டு வருடாந்தம் அனுஸ்டிக்கப்படுகின்றது. Read more