UN human right commssionஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் சுவிஸர்லாந்தின் ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகவுள்ளது. ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்க தலைமையிலான குழு இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையை பிரதித்துப்படுத்தவுள்ளது.

நாளைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சிறப்புரையாற்றவுள்ளார். இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையின் விவகாரங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படவில்லை. எனினும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்விகளை எழுப்புவதற்கு வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெனீவா சென்றுள்ள மனித உரிமை செயற்பாட்டு பொது அமைப்புக்களின் உப குழுக் கூட்டங்களின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொறுப்புக்கள் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையிலே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத்தொடர் நாளை ஆராம்பமாகின்றது.

இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர் நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசிற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற அமர்வின் போது வழங்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாளை ஆரம்பமாகும் கூட்டத்தொடர் இம்மாதம் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.