தேசிய ரீதியில் விவசாய வாரம் எதிர்வரும் 05ம் திகதி ஆரம்பமாகி ஒருவார காலம் அனுஸ்டிக்கப்படவிருக்கும் நிலையிலும், இதனையொட்டி எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட நிகழ்வொன்று நடைபெறவிருக்கும் நிலையிலும், மாகாணங்களின் விவசாய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றுபிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சர் ஹரிசன் உள்ளிட்டவர்களும், மாகாண அமைச்சர்களில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் தவிர்ந்த ஏனைய அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more