Header image alt text

ereegggயாழ். சுன்னாகம், கந்தரோடையில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும், பிரதேச இளைஞர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும், எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள் இளைஞர்களுக்கு விளக்கிக் கூறியதோடு, இவை தொடர்பிலான கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற்றிருந்தன.
Read more

fghfghfgயாழ். நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் இன்று இரு பாடசாலைகளுக்கும், இளைஞர் கழகம் மற்றும் கலாச்சாரப் பேரவை என்பவற்றிற்கும் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒரு தொகுதி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இவற்றுக்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. நல்லூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வின்போது செங்குந்தாய் இந்துக் கல்லூரிக்கு சுழல் கதிரைகள் மற்றும் மேஜைகளும், திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரிக்கு பல்ஊடக எறியீயும் (Multimedia Projector), குமரகோட்டம் இளைஞர் கழகத்திற்கு பிளாஸ்டிக் கதிரைகளும், மாவட்ட கலாச்சார பேரவைக்கு வெங்கலப் பொருட்களும் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டன. நிகழ்வில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் யுவராஜ் அவர்களும் கலந்து கொண்டிருந்ததார். Read more

jjjjjjயாழ். அரியாலை சனசமூக நிலையத்திற்கு புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒரு தொகுதி கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. யாழ். மாநகரசபையில் இன்று நடைபெற்ற மேற்படி நிகழ்வின்போது அரியாலை சனசமூக நிலையத்தின் செயலாளரிடம் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு தொகுதி கதிரைகளைக் கையளித்தார். நிகழ்வில் யாழ். மாநகரசபை துணை ஆணையாளர் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் யுவராஜ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

sasikalaஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை இரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாத்திரமே நிரந்தர பொது செயலாளர் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் அதிமுகவில் இனிவரும் காலங்களில் பொதுச் செயலாளர் எனும் பதவி இருக்காது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள் கட்சியின் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. Read more

arundika fernandoசுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 46 (3) (அ) பிரிவின்படி, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி நீக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

electricity board3 அம்சக் கோரிக்கைளை முன்வைத்து, நாளை நண்பகல் 12 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், “வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் 48 மணித்தியாலங்களுக்குள் எமக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காவிடின், எதிர்வரும் 15ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்போம்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளன. கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

seyed rad al hussainகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இராணுவம் கையகப்படுத்தியிருக்கும் காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹ_ஸைன் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது அமர்வு, ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது. அதன்போது, தனது வாய்மூல அறிக்கையை, உயர்ஸ்தானிகர் வழங்கினார். ஒவ்வொரு நாடு பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்திய அவர், இலங்கை சம்பந்தமாகவும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினார். Read more

sdபுதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நியமனக் கடிதங்களைக் கையளித்துள்ளனர். எஸ்டோனியா குடியரசு, பெரு குடியரசு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களே ஜனாதிபதியை சந்தித்து நியமனக் கடிதங்களை ஒப்படைத்துள்ளனர்.

நட்புறவுள்ள நாடுகளுக்கு இடையே பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வதன் ஊடாக நட்புறவை மேலும் பலப்படுத்த முடியும் என இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி, முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

UN commonஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூ யோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத் தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சிறப்புரையாற்றவுள்ளார். இந்தக் கூட்டத்தொடரில், இலங்கையின் விவகாரங்கள், நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படவில்லை. எனினும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்விகளை எழுப்புவதற்கு வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more