யாழ். நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் இன்று இரு பாடசாலைகளுக்கும், இளைஞர் கழகம் மற்றும் கலாச்சாரப் பேரவை என்பவற்றிற்கும் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒரு தொகுதி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இவற்றுக்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. நல்லூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வின்போது செங்குந்தாய் இந்துக் கல்லூரிக்கு சுழல் கதிரைகள் மற்றும் மேஜைகளும், திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரிக்கு பல்ஊடக எறியீயும் (Multimedia Projector), குமரகோட்டம் இளைஞர் கழகத்திற்கு பிளாஸ்டிக் கதிரைகளும், மாவட்ட கலாச்சார பேரவைக்கு வெங்கலப் பொருட்களும் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டன. நிகழ்வில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் யுவராஜ் அவர்களும் கலந்து கொண்டிருந்ததார்.