யாழ். சுன்னாகம், கந்தரோடையில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும், பிரதேச இளைஞர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும், எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள் இளைஞர்களுக்கு விளக்கிக் கூறியதோடு, இவை தொடர்பிலான கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற்றிருந்தன.