arundika fernandoசுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 46 (3) (அ) பிரிவின்படி, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி நீக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேர் எதிர்வரும் வாரங்களில் விலகவுள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தினை இவர் வெளியிட்டிருந்தார். அருந்திக பெர்ணான்டோ, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஜப்பானில் சந்தித்ததாகவும் கூறப்பட்டது.

அத்துடன் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் இவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.