Header image alt text

ffffffffffffவட மாகாண விவசாயம், கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்கள், கொக்குளாய் மேற்குப் பிரிவில் மீன்பிடி, விவசாய விடயங்கள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் நேற்று ஈடுபட்டிருந்தார்.

இந்த கலந்துரையாடலின்போது அத்துமீறிய மீனவர்கள் பிரச்சினை, பயிற்சியற்ற மீனவர்கள் பிரச்சினை, குளம், வாய்க்கால் புனரமைப்பு, விவசாய வீதிகள், பாலங்கள் புனரமைப்பு போன்ற கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டது.
Read more

european unionஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள், தொழிலாளர் மற்றும் சுற்றாடல் தரங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்று தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. அதேநேரம், பல விடயங்களில் இன்னும் மீளமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட நிலை அதிகாரிகள் பிரசல்ஸில் இருந்து வருகை தந்து கடந்த 10 நாட்களாக தகவல் அறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். Read more

sivaji teamஐக்கிய நாடுகள் சபையின் 36ஆவது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைக்கும் நோக்குடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையிலான ஐவர் அடங்கிய குழு நேற்று மதியம் ஜெனீவா சென்றடைந்துள்ளது.

இக்குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான தியாகராசா, பா.கஜதீபன், புவனேஸ்வரன், முன்னாள் உறுப்பினர் மயூரன் ஆகியோர் அடங்குகின்றனர். Read more

denmarkஇலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்குள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனத்தை வலியுறுத்த வேண்டும் என்பதை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது.

டென்மார்க்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ட்ரோல்ஸ் ராவின்ஸ் மற்றும் டென்மார்க்கின் சோஷலிஷ ஜனநாயக கட்சியின் நிறைவேற்று உறுப்பினர் தர்மகுலசிஙகம் ஆகியோர் அண்மையில் இலங்கைக்கு பணம் மேற்கொண்டிருந்தனர். Read more

mahinda desapriya (3)உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் திகதியோ அல்லது அதற்குப் பின்னரோ நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, இவ்வாண்டு டிசம்பரில், தேர்தல்களை நடத்த முடியாது. டிசம்பர் 9ஆம் திகதி என எமக்குச் சாத்தியமான திகதியில் தேர்தல்களை நடத்த வேண்டாமென, பரீட்சைகள் ஆணையாளர், எம்மிடம் கோரியுள்ளார் என அவர் நேற்று தெரிவித்துள்ளார். Read more

gazzetteகாணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானியில் அவர் கைச்சாத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Read more