இலங்கையில் காணாமல் போனோர் விடயம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கருத்தாடல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
புலம்பெயர்ந்த அமைப்பு ஒன்றினால் கடந்த வாரம் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிரித்தானியாவின் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த நிபுணர்களும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதன்போது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படுவதுடன், காணாமல் போனமைக்கான பொறுப்பாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற விடயமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய, கைது செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராக குற்றங்களைப் புரிந்ததாக, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலும் விவாதிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.