வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி மற்றும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டுமென்பதுடன், தற்போதுள்ள வாய்ப்புக்களை தவறவிட்டு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நழுவ விட்ட வாய்ப்புக்களை பற்றி யோசிக்க கூடாது என்பதே எனது யோசனையாக உள்ளதென சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் சகவாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் அரசசார்பற்ற நிறுவனங்களை சகவாழ்வுப் பாதையில் இணைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (16.09) இடம்பெற்றது. Read more