sdfdsஇலங்கையிலுள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டிமிட்ரி மஹய்லோவஸ்கி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் நேற்று சந்தித்துள்ளார்.

கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பு மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டார். இச் சந்திப்பில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. கலந்துரையாடலின் இறுதியில் இச் சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.