மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டமையினால் சபைக்குச் சமூகமளிக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேடிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரளிப்பதில்லை என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எ.எவ், புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்திருந்தனர். இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளரும் உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் சட்டமூலத்திற்கு எதிராக பேசிவிட்டு சபையில் இருந்து வெளியேறியிருந்தார். இதேபோன்று புளொட் அமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனும் வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்தார்.
Read more