அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 08.00 மணி முதல், நாடளாவிய ரீதியில், 24 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
மேலும், இவர்களுடன் வேறு சில சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.