மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நேற்றையதினம் மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 37 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையென, சட்டமா அதிபர் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய அறிவுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.