gmoஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகளால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தூரப்பிரதேசங்களிலிருந்து வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மாதாந்த சிகிச்சைகளைப் பெற முடியாதுள்ளதாக நோயாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து கல்வி சார் தொழிற்சங்கங்களும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.