savukadi murdersமட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

1990ம் ஆண்டு புரட்டாதி 20ம் திகதி சவுக்கடி மற்றும் ஆறமுகத்தான் குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடைபெற்று 27 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது உறவினர்களினால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தன்னாமுனை புனித சூசையப்பர் தேவாலய அருட்தந்தை தலைமையில் விஷேட பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்வில் உறவுகளை இழந்த குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.