(அச்சுவேலி நிருபர்)-
வலி.கிழக்கு பிரதேச செயலக பிரிவின் மேற்கு எல்லைக் கிராமமாகிய வளலாய் கிராமத்தை ஆக்கிரமிப்புச் செய்து வலி வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்கான எல்லை வரையறை செய்யப்பட்டிருப்பதும் அதனால் வளவாய் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்க அதிபரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவந்து நில அளவைப் படங்கள் மற்றும் பிரதேச செயலக எல்லை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எல்லையை நிர்ணயம் செய்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தர்ர்த்தன் வலிகிழக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
வலி.கிழக்குப் பிரதேச செயல பிரிவின் உள்ளடங்கலாக வளலாய் கிராமத்தை ஆக்கிரமிப்புச் செய்து வலி வடக்குப் பிரதேச செயலகப் பிரிவின் எல்லை வரையறை செய்திருப்பது, இதன்மூலம் பல வலி.வடக்கு பிரதேச செயலக்ப பிரிவின் பலாலி கிராமத்துக்கு உள்ளே உள்ளீர்ப்புச் செய்திருப்பது அநீதியானது. Read more