அவுஸ்திரேலியாவின் நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 50 அகதிகள், அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தினால், அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் 1250 அகதிகளை அமெரிக்கா ஏற்கவுள்ளது. இதன் முதற்கட்டமாக 50 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளவர்களது விபரங்கள் வெளியிடப்படும் என்றும் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் மேலும் தெரிவித்துள்ளார்.