(அச்சுவேலி நிருபர்)-
வலி.கிழக்கு பிரதேச செயலக பிரிவின் மேற்கு எல்லைக் கிராமமாகிய வளலாய் கிராமத்தை ஆக்கிரமிப்புச் செய்து வலி வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்கான எல்லை வரையறை செய்யப்பட்டிருப்பதும் அதனால் வளவாய் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்க அதிபரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவந்து நில அளவைப் படங்கள் மற்றும் பிரதேச செயலக எல்லை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எல்லையை நிர்ணயம் செய்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தர்ர்த்தன் வலிகிழக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
வலி.கிழக்குப் பிரதேச செயல பிரிவின் உள்ளடங்கலாக வளலாய் கிராமத்தை ஆக்கிரமிப்புச் செய்து வலி வடக்குப் பிரதேச செயலகப் பிரிவின் எல்லை வரையறை செய்திருப்பது, இதன்மூலம் பல வலி.வடக்கு பிரதேச செயலக்ப பிரிவின் பலாலி கிராமத்துக்கு உள்ளே உள்ளீர்ப்புச் செய்திருப்பது அநீதியானது.இந்த செயற்பாடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வளலாய் மக்களை மேலும் பாதிப்படையச் செய்திருப்பதோடு, காணிகள் இல்லாத நிலைக்கு உள்ளாகி இருப்பது சங்கத்தின் தலைவரினால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதோடு இந்த விடயத்தில் பாராளும்ன்ற உறுப்பினர் தலையிட்டு நிவர்த்தி செ;யயவேண்டும் என கோரிக்கi விடுக்கப்பட்டது.
கிராம அபிவிருத்திச் சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இணைத் தலைவர் த.சித்தார்த்தன் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் நேரடிக் கவனத்திற்குக் கொண்டு வந்து அளவைத் திணைக்களத்தின் வரைபடங்கள் மற்றும் எல்லை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய வலி.கிழக்கு வலி.வடக்கு பிரதேச செயலகங்களுக்கு உரிய எல்லையை வரையறை செய்வதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டும் எனத் தெரிவித்தார்.
(நன்றி: வீரகேசரி 21.09.2017)