unicefஇலங்கை அரசாங்கம் சிறார்களுக்கான முன் சிறுவர் பராய அபிவிருத்திக்கான கொள்கைகளை வகுக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் பரிந்துரைத்துள்ளது.

புதிய ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. அறிவுசார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இது மிகவும் முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 வருட முன்பள்ளி கல்வி, ஆறு மாத கால கட்டாய தாய்பால் ஊட்டலுக்கான கொடுப்பனவு வழங்கல் போன்ற விடயங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.