Header image alt text

missing personsகாணாமல்போனவர்கள் பற்றிய அலுவலகத்துக்கான உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பு பேரவையால் இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. குறித்த பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதன் பின்னர், அவை ஜனாதிபதிக்கு அனுப்பபட்டு, அவரால் நியமனங்கள் மேற்கொள்ளப்படும். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியபின், இப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

maithri al hussainஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹ_ஸைனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நிவ்யோர்க் சென்றுள்ள ஜனாதிபதி, மனித உரிமைகள் ஆணையாளரை நேற்றையதினம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். Read more

housing schemeவடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டப்பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த வீட்டுத் திட்ட பணிகளுக்கான கேள்விப்பத்திரக் கோரல், அச்சு ஊடகங்களின் ஊடாக நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். Read more

trainகொழும்பு கோட்டையிலிருந்து குருநாகல் நோக்கி பணித்துக் கொண்டிருந்த ரயில், பொல்ஹாவலையில் தடம்புரண்டதால்,

வடக்குக்கான ரயில் சேவைகள் யாவும் பாதிப்படைந்துள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.