ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹ_ஸைனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நிவ்யோர்க் சென்றுள்ள ஜனாதிபதி, மனித உரிமைகள் ஆணையாளரை நேற்றையதினம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது இலங்கையின் நல்லிணக்க பணிகள் தாமதாகமாக இடம்பெறுவதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து திருப்தியடையக்கூடியதாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.