Header image alt text

mahinda chandrikaநாட்டை மீட்டெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தவறில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.

இன்று நாம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கின்றோம். இந்த பாதையை மீண்டும் மோசமான பக்கம் திருப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். Read more

werewewwயாழ்ப்பாணம் ஊர்காவல்துறை ஆதார மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு இன்றைய தினம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த 2011 ஆம் ஆண்டு மலேரியா, காசநோய் மற்றும் எச்.ஐ.வி நோய் தடுப்பு நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

kajan.01jpgசுவிஸ் ஜ.நா. மன்றத்தில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்குபற்ற வருகைதந்த குழுவில் அங்கம் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கௌரவ வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா. கஜதீபன் அவர்களுடனான மக்கள் சந்திப்பொன்றிற்கு 24.09.2017 ஞயிற்றுக்கிழமை பி.ப 16.00மணிக்கு Schweighof strasse 296, 8055 Zurich, Swiss எனும் முகவரியில் ஏற்பாடு செய்ப்பட்டள்ளது

இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சுவிஸ் கிளை தோழமையுடன் அழைப்பு விடுக்கின்றது.

keppapulavuமுல்லைத்தீவு கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேப்பாபிலவு இராணுவ முகாம்களிலிருந்து படையினர் தற்போது வெளியேறிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more

un secretary Maithriஅரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. சபையின் 72வது அமர்வின்போது ஜனாதிபதி – குட்டெரஸ் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போதே குட்டெரஸ் மேற்படி கருத்து வெளியிட்டிருந்தார். Read more

000000வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வட்டு மத்திய கல்லூரி நவாலி அமெரிக்கன் மிசன் பாடசாலை மற்றும் யாழ்ப்பாணக் கல்லுர்ரியைச் சேர்ந்த மூன்று மாணவிகளுக்கு சங்க தலைமைக் காரியாலயத்தில் வைத்து நேற்று துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி விண்ணப்பம் கடந்த கால யுத்தத்தின்போது தந்தை காணமல் ஆக்கப்பட்ட தாய் தந்தை இருவரையும் இழந்த மற்றும் தந்தையினால் கைவிடப்பட்ட மூன்று மாணவிகளுக்கு பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் சமுர்த்தி உத்தியோகத்தர் மூலமும் எமது சங்கத்திடம் கடிதம் மூலம் தெரிவிக்கபட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா நாட்டில் உள்ள செல்வி அனுஜா செல்வக்குமார் அவர்களின் நிதி அனுசரனையுடன் இன்று 3 மாணவர்களுக்கும் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு செய்யபட்டுள்ளன. Read more

erter18 வயதுக்குக் குறைந்தவர்கள் வாகனங்களைச் செலுத்தும் பட்சத்தில், அவர்களது பெற்றோர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இதுபற்றித் தெரிவித்த மேற்படி சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோதாகொட, அண்மைக்காலமாக குறைந்த வயதுடையவர்கள் வாகனங்களைச் செலுத்துவதால் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். Read more