நாட்டை மீட்டெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தவறில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.
இன்று நாம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கின்றோம். இந்த பாதையை மீண்டும் மோசமான பக்கம் திருப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.