000000வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வட்டு மத்திய கல்லூரி நவாலி அமெரிக்கன் மிசன் பாடசாலை மற்றும் யாழ்ப்பாணக் கல்லுர்ரியைச் சேர்ந்த மூன்று மாணவிகளுக்கு சங்க தலைமைக் காரியாலயத்தில் வைத்து நேற்று துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி விண்ணப்பம் கடந்த கால யுத்தத்தின்போது தந்தை காணமல் ஆக்கப்பட்ட தாய் தந்தை இருவரையும் இழந்த மற்றும் தந்தையினால் கைவிடப்பட்ட மூன்று மாணவிகளுக்கு பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் சமுர்த்தி உத்தியோகத்தர் மூலமும் எமது சங்கத்திடம் கடிதம் மூலம் தெரிவிக்கபட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா நாட்டில் உள்ள செல்வி அனுஜா செல்வக்குமார் அவர்களின் நிதி அனுசரனையுடன் இன்று 3 மாணவர்களுக்கும் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு செய்யபட்டுள்ளன.துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம்,

செல்வி ஜ.அபிசாயினி – வட்டு மத்திய கல்லூரி
செல்வி அ.அபிநயா – நாவலி அமெரிக்கன் மிசன் பாடசாலை
செல்வி ஆ.லக்சிகா – யாழ்ப்பாணக்கல்லுரரி

மேலும் செல்வி அனுஜா செல்வக்குமார் அவர்களினால் கடந்த 2016ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த கலவெட்டித்திடல் நாகேஸ்வர வித்தியாலய 4 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

a1 a2 a10 a11 a12