Header image alt text

trumpஅமெரிக்காவுக்குள் நுழைய ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட சில நாடுகளுடன் தற்போது மேலும் மூன்று நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிப்பதாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். Read more

lalith jayasinga2015 ஆம் ஆண்டு கஹவத்த பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்கவை பெல்மதுல்லை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

image_5897dbf056மக்களின் காணிகளை விடுவித்து, அரச காணிகளில் படையினர் குடியேறவேண்டும் என மூதூர் பாட்டாளிபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாட்டாளிபுரத்தில், நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அங்குள்ள மக்கள் சார்பில், கிராம அபிவிருத்திச்சங்கம் இக்கோரிக்கையை விடுத்துள்ளது. Read more

ACCIDENTஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களின் 1789 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை இடம்பெற்ற விபத்துக்களில் 533 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் சாரதிகள் 588 பேர் உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்து விபத்திற்குள்ளாகியதில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். Read more

trainவடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளது. தம்புத்தேகம பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டமையால் வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை நேற்று மாலை முதல் தடைப்பட்டது.

நேற்றிரவு 9.45 அளவில் தடம்புரண்ட ரயில் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. Read more

strikeநாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சேவையிலிருந்து இடைவிலகப்பட்டுள்ள வட மாகாணத்தின் 05 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். Read more