ACCIDENTஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களின் 1789 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை இடம்பெற்ற விபத்துக்களில் 533 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் சாரதிகள் 588 பேர் உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்து விபத்திற்குள்ளாகியதில் 106 பேர் உயிரிழந்துள்ளனர்.ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஜூன் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 142 சாரதிகள் உயிரிழந்துள்ளதுடன் 256 பயணிகள் காயமடைந்துள்ளனர். இதுதவிர இந்த காலப்பகுதியில் 164 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.