image_5897dbf056மக்களின் காணிகளை விடுவித்து, அரச காணிகளில் படையினர் குடியேறவேண்டும் என மூதூர் பாட்டாளிபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாட்டாளிபுரத்தில், நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அங்குள்ள மக்கள் சார்பில், கிராம அபிவிருத்திச்சங்கம் இக்கோரிக்கையை விடுத்துள்ளது.திருகோணமலை, மூதூர் கிழக்கிலுள்ள பாட்டாளிபுரத்தில் நிலைகொண்டுள்ள, இராணுவத்தினர் தமது காணிகளை விடுவிக்க வேண்டும்” என்றும் அந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். 125 பேருடைய, பயிர்ச்செய்கை நிலங்கள் மற்றும் குடியிருப்புக்காணிகள், இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதற்கான அளிப்பு, (உறுதி) ஒப்பம் என்பன இருக்கின்றபோதும் அக்காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளன.

2004ஆம் ஆண்டில் தலா ஒரு ஏக்கர் நிலத்துக்கு, வழங்கப்பட்ட காணி உறுதி, மக்களிடம் உள்ளன. இதனால், சேனை விவசாயத்தை நம்பி வாழும் எமது ஏழைகள் சிரமப்படுகின்றனர் எனவும் மக்கள் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர். மக்கள் வாழும் பகுதியில், இராணுவத்தினர் 2006ஆம் ஆண்டுக்கு பின்னரே இம்முகாமை அமைத்துள்ளனர். அருகில், அரச காணியுள்ளன. எனவே, எமது காணியை விடுவித்து, அரச காணிகளை தேர்தெடுத்து அதில், முகாம்களை அமையுங்கள்” எனவும், இக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் எடுத்துரைத்தனர்.

இக்கிராமத்திலிருந்து, 2006.08.03இல், நாங்கள் இடம்பெயர்ந்தோம். இந்நிலையில், இம்முகாம் கிராமத்தின் மையத்தில் அமைக்கப்பட்டது. இன்னும் அது அகற்றப்படவில்லை என்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எடுத்துரைத்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.