Header image alt text

ffffffffffயாழ். நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் இரு பாடசாலைகளுக்கும், யாழ். மாவட்ட கைப்பணி அபிவிருத்தி சங்கத்திற்கும் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒரு தொகுதி உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. Read more

charlesசுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராகவும் மேலதிக அரசாங்க அதிபராகவும் உதவி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். யாழ். பல்கலைக்கழக பட்டதாரியான இவர் ரஜரட்டை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பினை மேற்கொண்டவராவார். Read more

provincial councialசப்ரகமுவ, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ளன. இதற்கமைய, சப்ரகமுவ மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைகின்றது.

மேலும், தற்போதைய நிலவரங்களின்படி, குறித்த மாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுநர் வசம் ஒப்படைக்கப்படலாம் என தெரியவந்துள்ளது. 2012ம் ஆண்டு ஜூலை 25ம் திகதி சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்பட்டு, அதேவருடம் செப்டம்பர் 8ம் திகதி தேர்தல் நடைபெற்றது. Read more

vidyaபுங்குடுதீவு மாணவி சி.வித்தியா கடத்தப்பட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டத்தின்படி புங்குடுதீவு மாணவி சி.வித்தியாவை கடத்தி கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட வழக்கினை விசாரிக்க தீர்ப்பாய நீதிமன்றம் நியமிக்கப்பட்டது. Read more

gggggggggggஐ.நா. சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, சுவிஸ் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களுக்கும்,

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குமிடையிலான சந்திப்பொன்று 24.09.2017 சுவிஸின் Schweighof strasse 296, 8055 Zurich என்னுமிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், வடமாகாணசபையில் நிலவும் பிரச்சினைகள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயங்கள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு, தெளிவான பதில்களும் வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்களினால் வழங்கப்பட்டது. Read more

lalith jayasinga2015 ஆம் ஆண்டு கஹவத்த பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெல்மதுளை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட விசாரணைப் பிரிவினரால் நேற்று முற்பல் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். Read more

kidnap caseகொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக நேற்று திறந்த மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். Read more

governmentமாகாண மற்றும் உள்ளூராட்சி எல்லை நிர்ணய முறையை பல கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்துடன் பதவிக் காலம் நிறைவுபெறும் வடமத்திய சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான எல்லை நிர்ணயம் செயற்பாடுகளை முதலாவது கட்டத்தின் கீழ் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக எல்லை நிர்ணய குழுவின் தலைவர் கணகரத்னம் தவலிங்கம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இதனை நிறைவு செய்வதற்கு சபாநாயகர் ஆலோசனை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். Read more

sdfsயாழ். காங்கேசன்துறை, மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து விமானங்களை தாக்கும் 5700 வெடிகுண்டுகள் அடங்கிய 67 பெட்டிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிணற்றை சுத்தப்படுத்தும்போது இந்தப் பெட்டிகள் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கிணற்றிலிருந்து அவை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. Read more

caffe30 சதவீதப் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதாக மேற்கொள்ளப்பட்ட மாகாணசபைகள் திருத்தச் சட்டத்தின் ஊடாக, பெண்கள் அமைப்பு, சிவில் அமைப்புகள் மட்டுமன்றி முழு நாடும் பாரிய ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது என, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. இந்தச் திருத்தச்சட்டத்தில், கூறப்படுகின்ற நோக்கமானது 30 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை,வேட்புமனுக்காக, சான்றுபகர்கின்றமையே ஆகும்.

ஆனாலும், ஏதேனும் வேட்புமனுப்பத்திரத்தில் குறித்த 30 சதவீதப் பெண்கள் தொகையானது உள்வாங்கப்படவில்லையானால், குறித்த வேட்புமனுவினை நிராகரிப்பதற்கு சட்டதிருத்தத்தில் எந்தவிதத்திலும் இடம் ஒதுக்கப்படவில்லை. அதற்கமைய, அவ்வாறான வேட்புமனுக்களை செயல் ரீதியாக நிராகரிப்பதற்கு, தெரிவத்தாட்சி அலுவலருக்கு முடியாது என, அவ்வமைப்பின் தேசிய கண்காணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
Read more