2015 ஆம் ஆண்டு கஹவத்த பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெல்மதுளை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட விசாரணைப் பிரிவினரால் நேற்று முற்பல் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட சிலரால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் விசாரணைகள் தொடர்பிலான தகவல்களை மறைத்தமை குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நேற்றுமுற்பகல் அவர் அழைக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது