sdfsயாழ். காங்கேசன்துறை, மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து விமானங்களை தாக்கும் 5700 வெடிகுண்டுகள் அடங்கிய 67 பெட்டிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிணற்றை சுத்தப்படுத்தும்போது இந்தப் பெட்டிகள் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கிணற்றிலிருந்து அவை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் சுமார் 87 விமானங்களை தாக்கும் வெடிகுண்டுகள் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பிரதேச காணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக அண்மையில் விடுவிக்கப்பட்டன. பலாலி விமானப்படை முகாமிற்கு அருகில் உள்ள மயிலிட்டி பிரதேசத்திற்கு, யுத்த காலத்தில் பலாலியில் இருந்து செல்லும் விமானங்களை தாக்கி அழிக்கும் நோக்கில் புலிகளால் இவை எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்புத்தரப்பு தெரிவிக்கின்றது.

குறித்த கிணற்றுக்குள் மேலும் பெடி பொருட்கள் இருக்கின்றதா என்பது தொடர்பிலான மேலதிகள் சோதனைகள் இன்று இடம்பெற உள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவின் கீழ் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவிடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.