governmentமாகாண மற்றும் உள்ளூராட்சி எல்லை நிர்ணய முறையை பல கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்துடன் பதவிக் காலம் நிறைவுபெறும் வடமத்திய சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான எல்லை நிர்ணயம் செயற்பாடுகளை முதலாவது கட்டத்தின் கீழ் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக எல்லை நிர்ணய குழுவின் தலைவர் கணகரத்னம் தவலிங்கம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இதனை நிறைவு செய்வதற்கு சபாநாயகர் ஆலோசனை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை துரிதப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் குழுவொன்றை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான உறுப்பினர்களுக்கான அனுமதி அரசியலமைப்பு சபையினால் வழங்கப்படும் என எல்லை நிர்ணய குழுவின் தலைவர் கணகரத்னம் தவலிங்கம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஏனைய மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய செயற்பாடுகளை துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.