புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து யாழ். திருநெல்வேலி வாலையம்மன் சனசமூக நிலையத்திற்கு நேற்று ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கிவைத்துள்ளார்.
நல்லூர் பிரதேச சபையில் பிரதேச சபையின் செயலாளர் திரு. சு.சுதர்ஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினரால் திருநெல்வேலி வாலையம்மன் சனசமூக நிலையத் தலைவர் டொக்டர் சி.பத்மராஜன் அவர்களிடம் மேற்படி ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கப்பட்டன.