ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத்தின்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவை (வை.கோபால்சாமி) இலங்கையர்கள் சிலர் தாக்க முற்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சிக்கப்பட்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்களால் இந்த முற்றுகை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முற்றுகை முயற்சியை தொடர்ந்து 11 பெண்கள் உட்பட 156 பேர் கைதுசெய்யப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.