யாழ். பருத்தித்துறை ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் ஆலய ஆதிமூல லக்ஸ்மி நாராயண அமுதசுரபி கற்கோவளம் ஈசான அன்னதான மடத்திற்கான புதிய மண்டபத்தினை புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று (29.09.2017) வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30மணியளவில் திறந்து வைத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து மேற்படி புதிய மண்டபத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி, பிரதேச சபை உறுப்பினர் குகதாஸ், மேற்படி மடத்தினுடைய நிர்வாகத்தினர், கல்விமான்கள், புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more