sarath fonsekaதாம் கட்டளை இட்ட எந்தவொரு இராணுவத்தினரையும் சர்வதேச நீதிமன்றத்திடம் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர், ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமது கருத்தால் ஐக்கிய நாடுகள் சபையில் இராணுவத்தினருக்கு எதிராக பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இராணுவம் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இராணுவ தளபதி என்ற வகையில் தவறிழைத்த இராணுவத்தினரை தாம் பாதுகாக்க போவதில்லை. அது அரச தலைவருக்கும் பொருந்தும். அத்துடன் சர்வதேச நீதிமன்றத்திற்கும் செல்ல போவதில்லை. பதிலளிக்க போவதும் இல்லை. இராணுவத்தில் தவறிழைத்த நான்கு ஐந்து பேர் இருப்பார்களாயின் இந்த நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு அமைய தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.