Header image alt text

sdfdsfபுதிய கடற்படை தளபதி வயிஸ் அத்மிரல் சிறிமெவன் ரணசிங்க இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

புதிய கடற்படை தளபதியாக கடமைகளை பொறுப்பேற்ற இவர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

rtytytபாதுகாப்பு தரப்பினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு ஊர்வலமொன்று இன்று இடம்பெற்றது.

வவுனியா ஏ9 வீதியில் கடந்த 250 நாட்களாக நடந்துவரும் தமது போராட்டத்தை அரசாங்கமோ, தமிழ் தலைமைகளோ கருத்தில் கொள்ளாத நிலை காணப்படுவதாகவும் எனவே சர்வதேசமும், புலம்பெயர் சமூகமும் இதில் தலையிட்டு தமது பிள்ளைகளை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இவ்வூர்வலத்தினை நடத்தினர். Read more

cabinet decisionநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது, நுவரரெலியா மாவட்டத்தின் நான்கு புதிய பிரதேச சபைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நோர்வுட், மஸ்கெலியா, அக்கரபத்தனை மற்றும் கொட்டகலை ஆகிய பிரதேச சபைகளுக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மேலும் இரண்டு பிரதேச சபைகள் உருவாக்குவது தொடர்பில் எதிர்ப்பு அலைகள் உருவாகியுள்ளது. Read more

european unionஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று இன்றையதினம் இலங்கை வரவுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வனஜின் லெம்பட் தலைமையிலான குறித்த குழுவில் ரிச்சட் கோபட், உல்ரிகோ முலர் மற்றும் வஜிட் கான் ஆகியோர் அடங்குகின்றனர்.

ஐரோப்பா வழங்கும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு நிகராக இலங்கையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஆராயும் முகமாகவே அந்த குழு இலங்கை வரவுள்ளது. Read more

norwayயுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களில் குடியேறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று நோர்வே வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் தோர்ப்ஜன் கோஸ்டாட்செதர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார். மக்கள் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதை உறுதி செய்வது கட்டாயமாகும். Read more

lanka chinaஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முக்கியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து இரண்டு நாடுகளும் கூர்ந்த அவதானத்தை செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனை சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். Read more

manus iland refugeesபப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் நிர்கதியாக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றவர்கள் நீண்டகாலமாக இந்த முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றனர். எனினும் குறித்த முகாம் சட்டவிரோதமானது என்பதால், அதனை மூடுமாறு பப்புவா நியுகினியின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி இன்றுடன் மூடப்படவுள்ளது. Read more

kekiravai studentஉணவு உண்ணாமையால் வாந்தி எடுத்ததை வைத்து கர்ப்பம் தரித்திருப்பதாக கூறி பாடசாலை மாணவி ஒருவர் விலக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

கெக்கிராவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றது. குறித்த மாணவி காலை உணவு உண்ணாததன் காரணமாகவே வாந்தி எடுத்ததாக கூறப்படும் நிலையில், அந்த பாடசாலையின் அதிபர், அவர் கருவுற்றிருப்பதாக கூறி பாடசாலையில் இருந்து நீக்கி இருந்தார். Read more

landகிளிநொச்சி இரணைதீவுப் பகுதியில், பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் வகையில், காணி அளவீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என, பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ்.கிருஷ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த இரணைதீவு நிலம், இன்றுவரை விடுவிக்கப்படாது, கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
Read more

karunaமுன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் பிரதியமைச்சராக இருந்தபோது,

அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் துளைக்காத அரச வாகனத்தை மீளளிக்காமை தொடர்பான குற்றச்சாட்டில், கருணா அம்மான் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். நேற்று மீண்டும் குறித்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. Read more