இதனையடுத்து காலவரையின்றி மாகாண சபை நிர்வாகம் ஆளுநரின் கீழ் வருகிறது.
மாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுநரின் கீழ் கொண்டு வரப்படுகின்ற அதேவேளை அடுத்த தேர்தலையடுத்து முதலாவது சபை கூட்டம் நடைபெறும் வரை அவைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி மட்டும் பதவியில் இருப்பார்.
மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின்கீழ் மாகாண சபை கலையும் நாளிலிருந்து தேர்தல் ஆணையம் ஒரு வார காலத்திற்குள் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டம் காரணமாக அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.