20 lawமாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டத்தின்கீழ் தொகுதி மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு தேர்தல் முறை கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கான தேர்தல் தொகுதிகளை எல்லையிட்டு தேர்தலை அடுத்த மார்ச் மாதம் நடத்த உத்தேசித்திருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாண சபை தொடர்ந்து ஆளுநரின் அதிகாரத்தில் இருப்பதை சிறுபான்மை இன கட்சிகள் விரும்பவில்லை. அது தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள சிறுபான்மை கட்சிகள் விரைவாக தேர்தல் நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கின்றன.‘இந்த வாரத்துடன் பதவி காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கு மார்ச் மாத இறுதிக்குள் தேர்தல்கள் நடைபெறும் என அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் அதில் நம்பிக்கையில்லை.

தேர்தல்களை நடத்த அரசு அச்சம் கொள்கின்றது  உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாமல் அரசாங்கம் தொடர்ந்து தள்ளிப் போடுவதையும் ‘கடந்த காலங்களை அனுபவ ரீதியாக பார்க்கும்போது கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை பொறுத்தவரை மாதக்கணக்கில் ஆளுநரின்கீழ் இருப்பது சிறுபான்மை இனங்களுக்கு சாதகமாக அமையுமா என்பது சந்தேகத்திற்குரியது. மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தில் இருக்க வேண்டிய மாகாண சபை ஆளுநரின் அதிகாரத்தில் இருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவு என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான பிரசன்னா இந்திரகுமார் குறிப்பிடுகின்றார்.

மாகாண சபைகளின் அதிகாரங்களை ஆளுநர் கையாள்வது மக்கள் ஆட்சிக்கு முரணானது  
உரிய நேரத்தில அரசு தேர்தலை நடத்த வேண்டும் நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் தான் ஆளுநர் ஆட்சியில் பங்கேற்க கூடிய சாத்தியப்பாடுகள் அரசியலமைப்பில் இருப்பதாகவும்
‘கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்திற்கு மாறாக மாகாண சபைக்கு மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமையை அரசாங்கம் இல்லாமல் செய்துள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்படாத ஒரு தனி நபரிடம் ஆட்சியை கையளிப்பது சர்வாதிகார போக்குடைய நிலைமையை மாகாணத்தில் தோற்றுவிக்கும்.
ஆளுநர் தனது அதிகாரங்களை பயன்படுத்தி தன்னிச்சையான முடிவுகளை எடுக்கும் போது சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தும்.
‘அரசாங்கம் காலம் தாழ்த்தாது தேர்தலை நடத்த வேண்டும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் .
 
கடந்த செவ்வாய்கிழமை சப்ரகமுவ மாகாண சபை கலைந்தது.  ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் வட மத்திய மாகாண சபையும் கலைகிறது.
இந்த மூன்று மாகாண சபைகளுக்கும் அக்டோபர் 2ம் தேதி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. ஆனால், இறுதியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் சட்ட திருத்த மசோதா அதற்கு தடையாக அமைந்துவிட்டது.
மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டத்தை காரணமாக காட்டி அரசாங்கம் குறித்த மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் தள்ளிப்போடுவது பல்வேறு தரப்பினரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
‘ஆளுநரின் கீழ் மாகாண சபைகள் நிர்வாகத்தை கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு முரணானது’ என்று உள்நாட்டு தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பப்ரல் குற்றம் சாட்டுகின்றது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற தவறுவதாகவும், தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்வதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.
‘இந்த வாரத்துடன் பதவிக் காலம் முடிவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்த வேண்டும்’ என்று பப்ரல் வலியுறுத்துகின்றது.