முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வீடொன்றில் இருந்து வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் இன்று மாலை நடந்துள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து சுற்றுவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. வெடிமருந்துகள், துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிக்கப்படும் பொருள்கள் என்பன மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.