உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்த மக்கள் கருத்து பெறப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை எரித்து மத்திய மாகாண சபையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அம் மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மேலும், குறித்த அறிக்கையில் நாட்டின் ஒருமைப்பாடு, பௌத்த ஆகமம் மற்றும் தற்போதுள்ள மாகாண சபை அதிகாரங்கள் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்கள் உள்ளதாக, மத்திய மாகாண சபை உறுப்பினர் நிமல் பிரேமவங்ச சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இன்றைய சபை அமர்வின் போது குறித்த அந்த அறிக்கையை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.